தென்னாப்பிரிக்காவின் காந்தி… மண்டேலா மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்!

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கருப்பு இன மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய தென்னாப்பிரிக்காவின் காந்தி என்று அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா அவர்கள் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அகிம்சை வழியில் போராடி வாழ்நாளில் பெரும் பகுதி காலத்தை சிறையிலே கழித்தவர். அடக்குமுறைகளை கண்டு அஞ்சாமல் சிறைவாசத்தை கண்டு சிறிதும் கலங்காமல், கொண்ட கொள்கையிலே மன உறுதியோடு இருந்து அதில் வெற்றி பெற்றவர். உலக மக்களால் அமைதிக்கு மறுபெயர் நெல்சன் மண்டேலோ என்று சொல்லக்கூடிய அளவில் புகழ் பெற்றவர்.
கறுப்பின மக்களுக்காக நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தி மக்களுக்காக வாழ்ந்தவர். அப்படிப்பட்ட சிறப்பு வாழ்ந்த ஒரு உலகத் தலைவரை இழந்திருக்கின்றோம். அவரை இழந்து வாடுகின்ற அவருடைய குடும்பத்தாருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவருடைய பெயரும், புகழும் பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும். அவருடைய வாழ்க்கை வரலாறு உலக வரலாற்றில் என்றும் மறையாது நிலைத்து நிற்கும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications