மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் தொடர வேண்டும் - ஆர்.நல்லக்கண்ணு
Subscribe to Oneindia Tamil
கரூர்: மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக தொடர வேண்டும் என்று மூத்த அரசியல் தலைவர் ஆர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
கரூர் அருகே உள்ள நஞ்சை புகளூர் காவிரி ஆற்றுப் பகுதியை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கம்யூனிஸ்டு கட்சிகள் இரண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். இதனை நான் நினைத்தால் மட்டும் போதாது. 2 கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள தலைவர்களும் விரும்ப வேண்டும்.
தற்போது மக்கள் பிரச்சினைக்காக 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகிறோம். தொடர்ந்து போராடுவோம்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில தொடர வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கட்சிகள் ஒற்றுமையுடன் போட்டியிட வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications