தனித்துப் போட்டி.. மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பிய தேமுதிக
சென்னை: இன்றைக்கு தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி இருக்கும் கேப்டன் விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்துக்கான கருப்பு, சிவப்பு நிறத்தில் மத்தியில் மஞ்சள் நிற தீபம் கொண்ட கொடியை 2002ல் அறிமுகம் செய்தார். பின்னர் அதுவே அரசியல் கட்சியாக மாறியது. அதுதான் இன்றைக்கு தேமுதிக கொடியாகவும் தொடர்கிறது.
தேமுதிக உதயம்:
1996 மற்றும் 2001 உள்ளாட்சித் தேர்தல்களில் விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் போட்டியிட்டனர். 500க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியும் பெற்றனர். இதுவும் கட்சி தொடங்கும் நிலைக்கு விஜயகாந்தை தள்ளியது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 2005ம் ஆண்டு ஆகஸ்ட்டில் தேமுதிகவை மதுரையில் முறைப்படி தொடங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் அரசியலில் காலடி எடுத்து வைத்தனர்.

தனித்து போட்டி:
2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளை எதிர்த்து தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, 8 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது. விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
அதிமுக கூட்டணி:
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை கைப்பற்றியது தேமுதிக.. விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி:
2014ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, போட்டியிட்ட எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இப்போது சட்டசபை தேர்தலில் அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளின் பலத்த எதிர்பார்ப்பாக தேமுதிக மாறியுள்ளது. திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என பல திசைகளில் இருந்தும் சிவப்புக் கம்பளம் விரித்து காத்திருக்கின்றனர்.
மீண்டும் தனித்து போட்டி:
சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக மகளிரணி மாநாட்டின் இறுதியில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
விஜயகாந்தின் முடிவை அனைத்து கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவரின் இந்த அறிவிப்பு அனைத்து கட்சிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திமுக, பாஜக, மக்கள் நல கூட்டணியினர் தான் விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வருவார் என பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் விஜயகாந்தின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications