''ம்ம்ம்ம்''.. மறுபடியும் நாக்கைத் துருத்தினார் விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் நாக்கைத் துருத்தி, கையை ஓங்கி, சவுண்டாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த், மீண்டும் ஒரு முறை தனது நாக்கைத் துருத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் இந்த முறை அவர் சென்னை நீதிமன்ற வளாகத்தில் நாக்கைத் துருத்தினார்.

விஜயகாந்த் நாக்கு துருத்துவது என்பது புதிய விஷயம் இல்லை என்ற போதிலும் அவர் பப்ளிக்காக இவ்வாறு செய்திருப்பது சற்றே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன் கோவில் தேர்தலுக்கு முன்பு

சங்கரன் கோவில் தேர்தலுக்கு முன்பு

சங்கரன்கோவில் சட்டசபை இடைத் தேர்தலுக்கு முன்பாக சட்டசபையில் கடும் வாதம் மூண்டது.

ஜெயலலிதா விட்ட சவால்

ஜெயலலிதா விட்ட சவால்

அப்போது முதல்வர் ஜெயலலிதா தேமுதிக மீது சரமாரியாக புகார் கூறி பேசினார். சவாலும் விட்டார்.

நாக்கைத் துருத்தி - கையை நீட்டி

நாக்கைத் துருத்தி - கையை நீட்டி

அதற்கு விஜயகாந்த் பதிலளித்தபோது ஆவேசமானார். அதிமுக எம்.எல்.ஏக்களைப் பார்த்து தனது நாக்கை மடித்துக் கடித்து துருத்தியபடியும், கையை நீட்டியும், கோபமாக பேசினார்.

2வது முறையாக நாக்கு துருத்தினார்

2வது முறையாக நாக்கு துருத்தினார்

இந்த நிலையில் தற்போது 2வது முறையாக நாக்கைத் துருத்தியுள்ளார். இந்த முறை நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் இன்று நடந்தது.

கோர்ட்டுக்கு வந்தபோது கூடவே வந்த கோபம்

கோர்ட்டுக்கு வந்தபோது கூடவே வந்த கோபம்

அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜரவாதற்காக இன்று கோர்ட்டுக்கு வந்திருந்தார் விஜயகாந்த். கோர்ட்டுக்குள் போய் விட்டு வெளியே வந்த அவருக்கு திடீரென ஏனோ கோபம் வந்து விட்டது.

முண்டியடித்த தொண்டர்கள்

முண்டியடித்த தொண்டர்கள்

விஜயகாந்த் கட்சித் தொண்டர்கள் அவரை நெருக்கித் தள்ளும் வகையில் முண்டியடித்ததால் டென்ஷனாகி விட்டார் விஜயகாந்த்.

வேகமாக நாக்கைத் துருத்தினார்

வேகமாக நாக்கைத் துருத்தினார்

இதையடுத்து கோபமாகவும், வேகமாகவும் தொண்டர்களைத் திரும்பிப் பார்த்த விஜயகாந்த் நாக்கைத் துருத்தி முறைத்துப் பார்த்தார். பின்னர் விரல் நீட்டி கோபமாக பேசினார். அடிக்கப் போலவே அவரது கை ஆக்ஷன் இருந்தது.

நல்லவேளை அடிக்கலை

நல்லவேளை அடிக்கலை

விஜயகாந்த்தின் இந்த நாக்குத் துருத்தலால் சற்றே பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் தர்மபுரி வேட்பாளருக்கு விழுந்தது போல யாருக்கும் இன்று அடி ஏதும் விழவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+