பக்ரீத் பண்டிகை அன்று 'குர்பானி' கொடுக்கும் விஜயகாந்த்
சென்னை: பக்ரீத் பண்டிகை அன்று தான் குர்பானி வழங்கவிருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இஸ்லாம் மார்க்கத்தில் பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு குர்பானி வழங்கி எல்லோரும் ஒன்றாக அன்றைய தினம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவது இயல்பு. பொதுவாக இஸ்லாம் மார்க்கம் ஈகையையும், தியாகத்தையும் போற்றுவதாகும். அந்த வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது பொருத்தமான ஒன்றாகும்.
தேமுதிக சார்பில் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பக்ரீத் பண்டிகையில் கலந்து கொண்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு கறி வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆங்காங்கே உள்ள தேமுதிக நிர்வாகிகள் பக்ரீத் பண்டிகை அன்று இஸ்லாமியர்களுக்கு கறி வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
தே.மு.தி.க. தலைமை கழகத்தின் சார்பில் 16-ந்தேதி புதன்கிழமை அன்று மாலை 4மணி அளவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு குர்பானி வழங்க இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய பெருமக்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications