விஜயகாந்த்தின் பேஸ்புக் பக்கத்தில் கரைபுரண்டோடும் கிண்டல் கமெண்டுகள்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கிண்டலடிக்கவே எக்ஸ்ளூஸிவாக நிறைய பேஸ்புக் பக்கங்கள் குவிந்து கிடக்கின்றன. அதற்கெல்லாம் முடிவு கட்ட முடியாமல் தேமுதிகவினர் தவித்துக் கொண்டிருந்த நிலையில் விஜயகாந்த்தே ஒரு அதிகாரப்பூர்வ பக்கத்தைத் திறந்தார். ஆனால் அங்கும் வந்து பலர் நக்கல், நையாண்டிகளை அவிழ்த்து விட்டு அவஸ்தைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் பல டுபாக்கூர் பக்கங்களைத் திறந்து அவரை சகட்டுமேனிக்குக் கிண்டலடித்து வருகிறது ஒரு குரூப். இதைத் தடுக்க போலீஸ் வரைக்கும் போய்ப் பார்த்தார் விஜயகாந்த். இருப்பினும் குறைந்ததே தவிர ஒழியவில்லை.
இந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக விஜயகாந்த்தே பேஸ்புக்குக்கு வந்து விட்டார். பதிவுகளையும் புகைப்படங்களையும் போட்டு வருகிறார். அதிலும் புகுந்து கமெண்ட்களில் கலாய்த்து வருகிறார்கள் விஷமிகள்.

சிரிப்பு காட்டும் நைனாக்கள்
பொன்ராஜ் பொன்ராஜ் என்ற குசும்பர் போட்டுள்ள கமெண்ட் இது. என்னை சிரிப்பு காட்டியமைக்கு நன்றி நைனாக்களே.. இன்னொரு கமெண்ட்.. எப்பா இந்த தளத்தை எடுத்துடாதீங்க. எங்கள் மனக்கவலை நீக்கும் அற்புதத் தளம் என்று கலாய்த்துள்ளார்.
|
நீங்க ஏன் தேடலை கேப்டன்
இன்னொருவர், மாயமான டோர்னியர் விமானம் குறித்து விஜயகாந்த் எழுதியிருந்த பதிவுக்கு இப்படி கமெண்ட் போட்டுள்ளார்.. கேப்டன் நீங்க ஏன் இந்த விமானத்தத் தேடலை என்று கேட்டுள்ளார்.

வடிவேல் பெயரில்
வைத்தியநாதன் வடிவேல் என்ற பெயரில் ஒருவர் மற்றசரக்குகளை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று குசும்பு காட்டியுள்ளார்.

இதெல்லாம் மன்னிச்சுரலாம்.. ஆனா..
இதையெல்லாம் கூட மன்னிச்சுடலாம்னு வைங்க.. ஆனால் ஒவ்வொரு பதிவிலும் ஒருவர் வண்டியோட்டி விளையாடி வருகிறார். அதுதாங்க குசும்பின் உச்சகட்டமாக இருக்கிறது.

எத்தாத்தண்டி வண்டி
பெரிய முன் வீலும், குட்டியூண்டு பின் வீலும் உள்ள பெரிய சைக்கிளை ஒருவர் ஓட்டுவது போன்ற படத்தை அந்த குசும்பர் எல்லா பதிவிலும் போட்டு வைத்துள்ளார். கூடவே வாவ் என்று கமெண்ட் வேறு.
ஆக்ஷனில் குதிங்க கேப்டன்..!

தூக்கிட்டாங்க பாஸ்
ஆனால் இப்போது இந்த சைக்கிள் பட கொண்ட பல பதிவுகளில் அதைத் தூக்கி விட்டனர். சில பதிவுகளில் மட்டும் இது தப்பிப் பிழைத்துக் காணப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications