உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. மருத்துவமனையிலிருந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்!
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார் .
கடந்த சில நாட்களுக்கு முன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் சிறிய அளவில் நலிவு ஏற்பட்டது. அவருக்கு உடலில் ஏற்கனவே இருந்த பிரச்சனை காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

தொடர்ந்து உடலில் பிரச்சனை இருந்ததால் மூன்று முறை வெளிநாடு சென்றும் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. திடீர் என்று மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். விஜயகாந்த் இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இதனால் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பி உள்ளார். அவரது உடல் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications