வர்றாரு.. வர்றாரு.. "கேப்டன்" வர்றாரு...!
சென்னை: மீண்டும் ஒருமுறை தேமுதிக பக்கம் அத்தனை கட்சிகளும் ஓரக் கண்ணை ஒதுக்க ஆரம்பித்துள்ளன. சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பது மட்டுமல்லாமல், இடையில் சில பல சர்ச்சைகளால் விஜயகாந்த் மற்றும் தேமுதிக மீது மக்களிடையே "பரப்பப்பட்ட" அவதூறுகள் தற்போது மறைந்து விட்டதால் விஜயகாந்த் மீது கட்சிகள் தனிப்பாசம் காட்ட ஆரம்பித்துள்ளன.
வருகிற சட்டசபைத் தேர்தலில் மீண்டும் தேமுதிக வெயிட்டான கட்சியாக களம் இறங்கும் என்பதால் இழுத்துப் பிடித்து உள்ளே போட ஒவ்வொரு கட்சியும் துடிக்கத்தான் செய்கின்றன.
இந்த நிலையில் இன்று நடந்த மது விலக்கு கோரியும், மதுக் கடைகளை மூடக் கோரியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
அதில் காணப்பட்ட விஜயகாந்த்தின் பல்வேறு விதமான முக பாவனைகளை வைத்து ஒரு சின்ன கற்பனை இதோ...

இந்தா வந்துட்டேன்..
ஜில்லென்ற சிரிப்புடன், கூலான கண்ணாடியுடன் சிங்கம் போல சிங்கிளாக நடந்து வருவதைப் பார்த்தால்.. கேப்டன்.. தனி டிராக்கில் தடதடத்துப் போகும் எக்ஸ்பிரஸ் ரயில் போல தானும் தனியேதான் வருவேன் என்பதை உணர்த்துகிறாரோ...!

கடவுளை மட்டும்தான்
கும்பிடு போட்டபடி கேப்டன் அமர்ந்திருப்பதைப் பார்த்தால், கடவுளை மட்டும்தான் கும்பிடுவேன்.. கண்டவர்களுக்கும் கும்பிடு போட்டு பணிய மாட்டேன் என்று உணர்த்துகிறாரோ...!

அது..!
இது கேப்டன் ஸ்டைல் சிரிப்பு + கை அசைவு.. இந்தப் புன்னகைக்குப் பின்னால் என்ன ஒளிந்திருக்கிறது.. என்ன ஓடுகிறது இவரது மனதில்.. அறிவார் யாரோ... ?

ஜம்முன்னு அசத்துவோம்ல...!
தேர்தல் வரட்டும்.. ஜம்முன்னுப் போட்டியிட்டு அசத்திருவோம்ல.. என்று சிரிக்கிறாரா இந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்...??

சொல்லுங்க கேப்டன்.. செஞ்சுருவோம்...!
கேப்டன் காட்டும் பாதையில் பயணித்து அவர் சொல்வதை செய்ய தயாராக காத்திருக்கும் மகளிர் படை...!

இந்தப் புன்னகை என்ன விலை...!
கேப்டனின் மெளன கும்பிடுக்கும்.. அவரது துணைவியார் பிரேமலதா விஜயகாந்த்தின் புன்னகைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ.. மணாளன் மனதில் உள்ளதை படித்துப் பார்த்து விட்டாரா திருமதி பிரேலதா...!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications