என் நண்பன் நலமடைய வேண்டும்: இஃப்தார் விருந்தில் உருகிய விஜயகாந்த்
ராமநாதபுரம்: உங்கள் பிரார்த்தனை மூலம் என் நண்பன் இப்ராகிம் ராவுத்தர் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உருக்கமாக கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது கட்சித் தொண்டனை தவிர வேறு யாருக்கும் பயப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
தே.மு.தி.க. சார்பில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் ஞாயிறு மாலையில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் பங்கேற்க வந்த தே.தி.மு.க தலைவர் விஜயகாந்தை, விருந்து மண்டபத்தில் கூடியிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதன் பின் விழா மேடைக்கு சென்ற விஜயகாந்துக்கு இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி அளிக்கப்பட்டது. இதனை தலையில் அணிந்து கொண்டு பேசத் தொடங்கினார் விஜயகாந்த்.

இறைவன் கட்டளை
இறைவனின் கட்டளைப்படியே ராமநாதபுரத்தில் இஃப்தார் விருந்து நடத்துகிறேன். இறைவன் நேரடியாக சொல்லவில்லை. எனது கட்சி நிர்வாகிகள் மூலம் சொல்ல வைத்தார்.

மக்கள் அளிக்கும் பதவி
நான் எப்போதும் சிறுபான்மையினருக்கு துணையாக இருப்பேன். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட மக்கள் அளிக்கும் பதவியை தான் மதிப்பதாகவும் விஜயகாந்த் கூறினார்.

மகனுக்கு பெயர்
இஸ்லாமிய சமுதாயத்தின் மீதுள்ள பற்று காரணமாக தனது மகனுக்கு சவுகத் அலிகான் என்று பெயர் சூட்டியதாகவும் பாஸ்போர்ட் பிரச்னை காரணமாக பெயரை மாற்றியதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.

நண்பனுக்கு பிரார்த்தனை
தீயவைகளை அழிப்பதே நோன்பின் மான்பாக சொல்லப்பட்டுள்ளது. அதை நீங்கள் செய்ய வேண்டும். நானும் அதைதான் செய்கிறேன். எனது நண்பன் இப்ராகிம் ராவுத்தர் உடல் நலகுறைவாக இருக்கிறான். உங்களது பிரார்த்தனை மூலம் அவன் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்றும் விஜயகாந்த் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications