சித்தராமையா மாதிரி நாமும் போய் மோடியைப் பார்க்கலாம்... ஓபிஎஸ்க்கு கேப்டன் அழைப்பு
சென்னை: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி குழுவுடன் பிரதமரை சந்திக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரமாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி குழு ஏப்ரல் 22-ந்தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

எனவே தமிழக அரசு மற்ற எல்லா மக்கள் பிரச்சனைகளிலும் மெத்தனம் காண்பிப்பது போல் இல்லாமல், இந்த விவகாரம் நம் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை.
ஏற்கனவே வறட்சியிலும், வறுமையிலும், வாடும் நம் தமிழக விவசாயிகளின் வாழ்க்கை பிரச்சனை என்ற மிகப்பெரிய பொறுப்போடு, ஆளும் கட்சியின் இந்நாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் உடனடியாக அனைத்து கட்சியை கூட்டி குழு அமைத்து நம் தமிழக மக்களின் உரிமையை வலியுறுத்த பாரத பிரதமர் நரேந்திரமோடியை உடனடியாக சந்தித்து, தமிழகத்தின் நிலையையும், நியாயத்தையும் எடுத்துரைக்க வேண்டும்.
ஏற்கனவே தமிழக எம்.பி.க் கள் குழு பாரத பிரதமரை மேகதாது பிரச்சனை குறித்து சந்தித்தபோதிலும் பயன்அளிக்காத நிலையில், நம்முடைய நியாயத்தை மத்திய அரசிடம் வலுவாக பதிய வைக்கவேண்டும். எனவே தமிழகத்தின் அனைத்து கட்சி குழு பாரத பிரதமரை உடனடியாக சந்திக்க உரிய ஏற்பாடு செய்யவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications