பயந்து ஓடிய "வேட்பாளர்கள்"... பயங்கர "ஷாக்"கில் விஜயகாந்த்!
சென்னை: கிட்டத்தட்ட நடிகர் கார்த்திக் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் விஜயகாந்த். ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட இவருக்கு வேட்பாளரே கிடைக்கவில்லையாம். யாருமே போட்டியிட முன்வராததால் கடும் அப்செட்டாகி விட்டாராம் அவர்.
என்னதான் எதிர்க்கட்சி என்றாலும், அடுத்த தேர்தலி்ல் வலுவான கூட்டணி அமைக்க முயற்சிகள் எடுத்து வந்தாலும் கூட ஜெயலலிதாவை எதிர்த்து களம் காண தேமுதிகவில் யாருமே முன்வரவில்லையாம்.

இத்தனைக்கும் தனக்கு மிகவும் நெருக்கமான, நம்பிக்கையானவர்களிடம்தான் போட்டியிடுகிறீர்களா என்று கேட்டுப் பார்த்துள்ளாராம் விஜயகாந்த். ஆனால் அவர்கள் தற்போது கட்சி அலுவலகம் பக்கமே வராமல் பதுங்கி இருக்கிறார்களாம்.
அதிமுகவின் பண பலம், ஆள் பலம், அதிகார பலம் ஆகியவற்றுக்கு முன்பு தங்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்று இவர்கள் புலம்பி வருகிறார்களாம். இவர் பாட்டுக்கு நிறுத்தி விட்டுப் போய் விடுவார். பின் விளைவுகளை நாம்தானே சந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்களாம்.
டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு தருவதற்குப் பதில் நாமே ஜெயலலிதாவுக்கு டப் பைட் கொடுக்கலாம் என்பதுதான் விஜயகாந்த்தின் எண்ணம். ஆனால் அதற்கான சாத்தியக் கூறு சுத்தமாக இல்லாமல் போய் விட்டது தற்போது.
ஆர்.கே.நகரில் நிறுத்துவது தொடர்பாக சிலரை தேர்வு செய்து அவர்களை அழைத்து விஜயகாந்த்தும், பிரேமலதாவும் பேசியதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே எங்களால் அவர்களுடன் மோத முடியாது, மன்னிச்சிருங்க என்று கூறி ஜகா வாங்கி விட்டனராம்.
இதனால் அதிர்ச்சியாகி விட்டாராம் விஜயகாந்த். காரணம், அவர் கூப்பிட்டு கருத்து கேட்ட அனைவருமே விஜயகாந்த்தின் தீவிர விசுவாசிகள். அவர் சொன்னலை தட்டாமல் செய்யக் கூடியவர்களாம். அவர்களே இப்படிச் சொன்னது கட்சி குறித்த கவலையையும் சேர்த்து விஜயகாந்த்துக்கு ஏற்படுத்தி விட்டதாம்.
இப்படி வேட்பாளரை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்தான் தேர்தலில் நிற்கும் முடிவிலிருந்து தேமுதிக பின்வாங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications