'பேஸ்புக்'குக்கு வந்தார் 'சின்னக் கவுண்டர்'...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் தலைவர்களில் அடுத்தபடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், பேஸ்புக்கில் பக்கம் திறந்து, போஸ்ட் போட்டு கிரகப் பிரவேசம் செய்துள்ளார்.

முதல் போஸ்ட்டாக அனைவருக்கும் வணக்கம், இது என் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம். இதன் மூலம் கட்சியின் அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று போட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் என பலரும் பேஸ்புக்கில் ஏற்கனவே பிசியாக உள்ளனர்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

தமிழகத்தைச் சேர்ந்த பல்துறைப் பிரமுகர்களும் ஆளுக்கு ஒரு பக்கத்துடன் கலக்கி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது விஜயகாந்த் இணைந்துள்ளார்.

"ஓட்டல்" பக்கங்கள் அதிகம்

விஜயகாந்த்தை வைத்து பேஸ்புக்கில் பல கிண்டல் கேலி நையாண்டிப் பக்கங்கள் உள்ளன. இது பெரும் புயலையும் கிளப்பியது. இதுதொடர்பாக போலீஸிலும் கூட புகார் கொடுத்தார் விஜயகாந்த். இருந்தாலும் இன்னும் முழுமையாக இந்த கிண்டல்கள் முடிந்தபாடில்லை.

நேரடியாக களம் குதித்தார்

நேரடியாக களம் குதித்தார்

இந்த நிலையில் அவரே பேஸ்புக்குக்கு வந்து விட்டார். புதுப் பக்கம் ஒன்றை அவர் திறந்துள்ளார். இதுவே தனது அதிகாரப்பூர்வ பக்கம் என்று அவர் போட்டுள்ளார்.

ஜூலை 1 முதல்

ஜூலை 1 முதல்

ஜூலை 1ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தைத் திறந்துள்ளார் விஜயகாந்த். ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது வருகையை அவர் தெரிவித்துள்ளார்.

கிரீட்டிங்ஸ்.. வணக்கம்!

கிரீட்டிங்ஸ்.. வணக்கம்!

கிரீட்டிங்ஸ் என்றும், அனைவருக்கும் வணக்கம் என இரு பதிவுகளாக போட்டுள்ள அந்த முதல் போஸ்ட்டில், அனைவருக்கும் வணக்கம். இது, என் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம். இதன் மூலம் கட்சியின் அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என, தெரிவித்திருந்தார்.

பல பதிவுகள்

தொடர்ந்து பல பதிவுகளை அவர் இட்டுள்ளார். சிறுவர்களுக்கு மது கொடுத்த கொடுமை சம்பவம், இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது, ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவியது உள்பட பலவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.

நண்பா நலம் பெற்று வா

நண்பா நலம் பெற்று வா

மேலும், தனது உயிர் நண்பரான இப்ராகிம் ராவுத்தர் குறித்தும் எழுதியுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராவுத்தர் குறித்து அவர், உடல் நலம் பெற்றுத் திரும்ப வேண்டியுள்ளார்.

தேமுதிகவினர் உற்சாகம்

தேமுதிகவினர் உற்சாகம்

"சின்னக் கவுண்டர்" நேரடியாகவே பேஸ்புக்குக்கு வந்து விட்டார். இனி பட்டையைக் கிளப்பப் போகிறார் என்று தேமுதிகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இங்க வந்தும் ஓட்டாம இருந்தா சரிதான்

இங்க வந்தும் ஓட்டாம இருந்தா சரிதான்

ஆனால் எங்கெங்கோ விஜயகாந்த்தை தாறுமாறாக ஓட்டிக் கொண்டிருப்போர் நேரடியாக இங்கு வந்து பொங்கல் வைக்காமல் இரு்நதால் சரிதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+