டெல்லி சட்டசபைத் தேர்தலில் தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை டெல்லி ஜந்தர் மந்தரில் தேமுதிக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் விஜயகாந்த்தும், பிரேமலதா விஜயகாந்த்தும் பேசினர். அப்போதே வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயகாந்த் எதையும் சொல்லவில்லை.

இன்று மாலை தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் வேட்பாளர்களை விஜயகாந்த் அறிவிப்பார் என்று கடைசியாக வந்த தகவல் தெரிவிக்கிறது.

Vijayakanth and Preamalatha Vijayakanth to announce candidates for Delhi assembly polls today

முன்னதாக நேற்று இரவு டெல்லி வந்த விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள், டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து கேட்டனர்.

அதற்கு விளக்கம் அளித்து விஜயகாந்த் பதிலளிக்கையில், ஏமாற்றப்பட்டு வரும் தமிழர்களுக்கு நியாயம் கேட்கவே டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சரி டெல்லி பயணத்தின்போது அரசியல் தலைவர்கள் யாரையாவது சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, தேமுதிக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவே டெல்லி வந்திருப்பதாகவும், அரசியல் கட்சித் தலைவர்கள் யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்தார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+