பிரியா வாரியரின் புருவ டான்ஸ் வித் ‘கேப்டன்‘.. அசத்தல் ட்ரோல் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  என்னமா பிரியா..நீ..எங்க விஜயகாந்த சாருக்கு பதில் சொல்லும்மா..வீடியோ

  சென்னை: மலையாள நடிகை பிரியா வாரியரின் புருவ டான்ஸின் கேப்டன் வெர்சன் வைரலாகி வருகிறது.

  மலையாள நடிகையான பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் இடம்பெற்றுள்ள மாணிக்க மலரே என்ற பாடலில் நடிகை பிரியா வாரியார் புருவ அசைவாலேயே நடனமாடியுள்ளார்.

  Vijayakanth Priya wariyar eyebrow dance video became viral

  அவரது புருவ அசைவுக்கு லட்சக்கணக்கானோர் ரசிகர்களாகியுள்ளனர். இந்த புருவ டான்ஸின் மூலம் பிரியா வாரியருக்கு மூன்றே நாட்களில் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் கிடைத்துள்ளனர்.

  தனது புருவ அசைவிலேயே காதலை வெளிப்படுத்தும் அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதனை பல்வேறு தமிழ் நடிகர்களின் ரியாக்ஷனுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ட்ரோல் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில் நடிகர் விஜயகாந்தும் பிரியா வாரியரும் கண் அசைவால் பேசிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Priya wariyars eyebrow dance hits social media. Tamil heroes reaction videos became vairal. Vijayakanth Priya wariyar eyebrow dance video became vairal.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற