தேர்தலில் பணம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன்... கோவிலில் உறுதிமொழி எடுத்த விஜயகாந்த்
உளுந்தூர்பேட்டை: சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ அல்லது யாரிடம் இருந்தும் பணம் வாங்கவோ மாட்டேன் என உளுந்தூர்பேட்டை பரிக்கல் கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வகையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ100 கோடியை எட்டுகிறது.

புதுபுது வியூகங்கள்
அத்துடன் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் உணவுப் பொட்டலங்களுக்குள் பணம் வைத்து கொடுப்பது, பணத்துக்கு பதிலாக பெட்ரோல் போடுவதற்கான டோக்கன்கள் கொடுப்பது என புதுபுது வியூகங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

உளுந்தூர்பேட்டையில்...
பிரதான கட்சிகளான ஆளும் அதிமுக, திமுக தான் இத்தகைய பார்முலாக்களை கடைபிடிப்பதாக தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டார்.

சாமி சிலை முன் உறுதிமொழி
அப்போது தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டேன் என சாமி சிலை முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக தேமுதிகவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் படத்துடன் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படியும் ஒரு பரபரப்பு வந்தது
சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்குகள் பிரியும் வகையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ மூலம் ரூ1,500 கோடி பணத்தை அதிமுக மேலிடம் கொடுத்ததாக பரபரப்பான புகார் கிளம்பியிருந்தது. இதற்காகத்தான் அவர் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி தேமுதிகவுடன் கூட்டணி வைத்தார் எனவும் கூறப்பட்டது. இதே குற்றச்சாட்டை விஜயகாந்தின் வலதுகரமாக இருந்து அவரிடம் இருந்து பிரிந்து வந்த சந்திரகுமாரும் ஊடகங்களில் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications