நாளை ஜெ. தீர்ப்பு.. நேற்று இரவே சிங்கப்பூரிலிருந்து 'ரிட்டர்ன்' ஆன விஜயகாந்த்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படவுள்ள நிலையில், சிங்கப்பூருக்குப் போயிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவோடு இரவாக சென்னை திரும்பினார்.
கடந்த ஜெயலலிதா தீர்ப்புக்கு முன்பு வரை விஜயகாந்த் தீவிர செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்தார். அவரது உடல் நலம் காரணமாக அதிகமாக செயல்படாமல் இருந்து வந்தார். மறுபக்கம் அவரது கட்சி வேறு உடைந்து கொண்டு வந்தது. இதனாலும் அவர் வேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்குப் பாதகமாக தீர்ப்பு வந்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த நாளே புத்துணர்ச்சியோடு வெளியே வந்தார் விஜயகாந்த். காரை எடுத்துக் கொண்டு கவர்னரைப் பார்த்து புகார் மனு கொடுத்து விட்டு வந்தார். ஜெயலலிதா ஜாமீனி்ல் வெளியே வரும் வரை அவர் புத்துணர்வோடு பேசி வந்தார் நடமாடி வந்தார்.

ஆனால் ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் அமைதியானார். மகன் பட வேலைகளில் மும்முரம் காட்டினார். பல முக்கியப் பிரச்சினைகளிலும் கூட அவர் கருத்து சொல்லாமல் இருந்து வந்தார். சிங்கப்பூரிலேயே நீண்ட நாட்கள் முகாமிட்டிருந்தார். திரும்பி வந்தபோது சக்கர நாற்காலியில் அவரைக் கூட்டி வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2ம் தேதி திடீரென சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் விஜயகாந்த். அவருடன் மனைவி பிரேமலதா மற்றும் குடும்ப மருத்துவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சென்றனர். அவரது சிங்கப்பூர் பயணத்துக்கான காரணம் பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்துக்கு லொக்கேஷன் பார்ப்பதற்காகவும், மருத்துவ பரிசோதனைக்காகவும் விஜயகாந்த் சென்றிருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று காலை அவர் சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால் நேற்று இரவே அவர் மனைவி, குடும்ப மருத்துவருடன் சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பி விட்டார்.
நாளை ஜெயலலிதா தீர்ப்பு வரவுள்ள நிலையில் முன்கூட்டியே விஜயகாந்த் சென்னை வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications