ஜூன் 4ம்தேதி தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்: பாஜக கூட்டணிக்கு முழுக்கா?
சென்னை: தேர்தலில் தேமுதிக பெற்ற படுதோல்விக்கு பிறகு முதன்முறையாக வரும் 4ம்தேதி விஜயகாந்த் தலைமையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார். பாஜக கூட்டணியில் தொடருவதா வேண்டாமா என்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. பாஜகவுடன் தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றது. பாஜக, பாமக, புதுவை என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வென்றன. பாஜ கூட்டணியில் அதிக இடங்களை பிடிக்க முடியாவிட்டாலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் செய்த பிரசாரம் பாஜவினரிடம் வரவேற்பை பெற்றது.இதனால், டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு சென்றிருந்த விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருக்கு மிகுந்த மதிப்பு தரப்பட்டது. மோடி அப்போது விஜயகாந்தின் கன்னத்தை தடவி, கட்டிப் பிடித்து பாராட்டினார்.
ஆனால் அதன்பிறகு விஜயகாந்தை பாஜகவில் யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. டெல்லியில் 3 நாட்கள் தங்கியிருந்த விஜயகாந்த், பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க முயற்சித்தார். ஆனால், அவர்கள் விஜயகாந்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவை சந்திக்க வரும் 3ம் தேதி பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது அரசியல் பேசப்படலாம் எனதெரிகிறது. அதிமுகவை பாஜக தனது கூட்டணியில் இணைக்க முயலுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் தனக்கு நேரம் ஒதுக்காமல், முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடனடியாக நேரம் ஒதுக்கியதும், தேர்தலுக்கு பின் தங்களுக்கு பாஜ தலைவர்கள் மதிப்பளிக்காததும் விஜயகாந்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 4ம் தேதி தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளார். அதில் பாஜ கூட்டணியில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications