சிவாஜி, கமலைவிட நன்றாக நடிக்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்: விஜயகாந்த் கடும் தாக்கு
முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் நன்றாக நடிப்பதாக சாடியுள்ளார் விஜயகாந்த்.
விழுப்புரம்: சிவாஜி கணேசன், கமல்ஹாசனை விட ஓபிஎஸ், ஈபிஎஸ் நன்றாக நடிப்பதாக தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் சாடியுள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்து விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜயாகாந்த் பேசியதாவது:
ஜெயலலிதா அரசு 100 நாள் சாதனை 100 ஆண்டுகள் பேசும் என கூறினார்கள். ஆனால் ஓராண்டிலேயே ஜெயலலிதா மறைந்து போய்விட்டார்.

ஜெயலலிதா மறைந்த ஓராண்டில் லஞ்சத்திலும் ஊழலிலும்தான் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் பலி என்கிறார் அமைச்சர்.
நெல்லையில் தீக்குளித்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய எடப்பாடி அரசால் கந்துவட்டி கொடுமையை ஒழித்து கட்ட முடியவில்லை. கந்து வட்டியால் நாளை விவசாயிகளும் இறக்க நேரிடும்..அப்போது விஜயகாந்த் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பயன்படுத்தி ஈபிஎஸ், ஓபிஎஸ் சம்பாதிக்கிறார்கள். சிவாஜி, கமலை விட ஈபிஎஸ், ஓபிஎஸ் சிறந்த நடிகர்கள். அதிமுக தொண்டர்கள் விரைவில் தேமுதிகவுக்குதான் வருவார்கள்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications