'நான் ஒரு குழப்பவாதியே...': பிறந்த நாள் விழாவில் விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
சென்னை: "அரசியல் கட்சிகள் நான் என்ன செய்கிறேன் என்று குழம்பி உள்ளன. குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் நான் என்று பிறந்த நாள் விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியிருப்பது பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நேற்று இரவு சென்னையை அடுத்த மறைமலைநகரில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று விஜயகாந்த் பேசியதாவது:
பூந்தமல்லி அருகே உள்ள குமணன்சாவடியில் மழை பெய்த தண்ணீர் அப்படியே நிற்கிறது. இது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கிறது. என்ன செய்கிறது அரசு.? இந்த அதிமுக அரசுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
பயந்துவிட்ட ஜெயலலிதா
ஈவிகேஎஸ் இளங்கோவன் தவறாக பேசிவிட்டார் என்கிறார்கள். அவர் தான் பேசியதை தவறாக நினைக்க வேண்டாம் என்று சொல்லிட்டாரே. மதுரை, தூத்துக்குடி வரை சென்றேன். அங்கு அவருக்கு எதிராக எங்கும் எதுவும் நடக்கவில்லை. எங்க எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிடுவார்களோ என்ற பயத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்த வேண்டாம் என்று ஜெயலலிதா சொல்கிறார். கூட்டணி பற்றி இப்போது பதில் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது.
சட்டசபைக்கு போகாதது இதற்கு...
ஜெயலலிதா கடந்த 4 ஆண்டுகாலமாக என்ன செய்தார். சட்டசபையில் 110 விதியை படித்தார்கள். சட்டசபையில் பூஜ்ஜிய நேரம் என்று உள்ளது. ஏதேனும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்தால் 24 மணி நேரத்திற்கு முன்பு கொடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால் அதிமுகவினர் கொடுத்தால் அன்றைக்கே எடுத்துக்கொள்கிறார்கள். இதற்குதான் சட்டசபைக்கு போகவில்லை.
லிஸ்ட் வரும்
சட்டசபையில் இதுபற்றி கேள்வி கேட்டால் இது சினிமா இல்லை. இது சினிமா இல்லை என்று கத்துகிறார்கள். சினிமாக்காரன் நான் இல்லை. உங்க அம்மாதான். நத்தம் விஸ்வநாதன் பேசுகிறார் வானத்தில் மின்வெட்டு இருக்கலாம், ஆனால்தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்றார். நீங்கள்ஆட்சிக்கு வந்து என்ன மின் திட்டங்கள் போட்டீர்கள். என்ன ஊழல் பண்ணீங்க என்ற லிஸ்ட் வரிசையாக வரும்.
அரசியல் கட்சிகள் விஜயகாந்த் என்ன செய்கிறான் என்று குழம்பி உள்ளன. குழப்பத்தை ஏற்படுத்துவது தான் விஜயகாந்த். வழக்குகளை கண்டு தே.மு.தி.க. அஞ்சாது.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications