தமிழர் உணர்வை வஞ்சிக்காதே.. ஜல்லிக்கட்டை நடத்த விஜயகாந்த் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்
இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி அலங்காநல்லூரில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பட்டன.
சென்னை: பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி தேமுதிக சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது.
பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான போட்டி ஆண்டு தோறும் தென்மாவட்டங்களில் நடத்தப்படும். அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மிக பிரசித்தம். இந்த விளையாட்டை கடந்த இரண்டாண்டுகளாக நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு கட்சிகள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், காலம் காலமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும். தமிழர்களின் உணர்வுகளை வஞ்சிக்காதே, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை தேமுதிக தொண்டர்கள் முழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications