தமிழகம் முழுவதும் அங்காடிகளில் ரூ.110 க்கு துவரம் பருப்பை விற்பனை செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அங்காடிகளில் ரூ.110 க்கு துவரம்பருப்பை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை, அதிமுக அரசு கட்டுப்படுத்த வேண்டுமென்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தேன். தற்போது அதிமுக அரசு சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பெருநகர பகுதிகளில், 91 அங்காடிகள் வாயிலாக அரைகிலோ ரூ.55க்கும், ஒரு கிலோ ரூ.110க்கும் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அரசு அறிவித்தபடி துவரம்பருப்பு விற்பனை நடைபெறுகிறதா? அதற்கு தேவையான அளவு துவரம்பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? அங்கு தேவையான அளவிற்கு இருப்பு உள்ளதா? என்பதையெல்லாம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பே தெரிந்து கொள்ளவேண்டும்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த இரண்டு நாட்களாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பெருநகரங்களில் நான் விசாரித்த வகையில், துவரம் பருப்பு முழுமையாக விநியோகம் செய்யப்படுவதாக தெரியவில்லை. காலை நேரத்தில் 11.00 மணி வரை சுமார் 200 கிலோ துவரம் பருப்பை மட்டுமே அங்காடிகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது. அதன் பின்பு துவரம் பருப்பு வாங்கச் சென்றால், துவரம் பருப்புக்கு பதிலாக இல்லை என்ற வார்த்தைதான் அங்கே கிடைக்கிறது.
இதுகுறித்து அங்காடிகளின் ஊழியர்களை விசாரித்தால், துவரம் பருப்பு இருப்பு இருந்த வரைக்கும் விற்றுவிட்டோம். இனி நாளைதான் துவரம் பருப்பு அங்காடிக்கு வரும் அதன் பிறகுதான் விநியோகம் செய்யமுடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் அதிமுக அரசு இதுகுறித்து அறிவிப்பை வெளியிடும்போது, தமிழகம் முழுவதும் ரூ. 110க்கு துவரம் பருப்பு கிடைக்கும் என்பது போன்ற தோற்றத்துடன் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அது நடைமுறைக்கு வரும்போது "யானைப்பசிக்கு சோளப்பொறியாக" மாறி, நான்கு பெருநகரத்தில் மட்டும் துவரம் பருப்பு விநியோகம் செய்யப்படுகிறது. அந்த நான்கு பெரு நகரங்களுக்கும் சென்று பார்க்கும்போது "கழுதை தேய்ந்து கட்டெறும்பான" கதையாக, 91 அங்காடிகளில் சுமார் 250 மூட்டை துவரம் பருப்பு மட்டுமே, தினந்தோறும் விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.
சட்ட மன்றத்தில் அமர்ந்துகொண்டு 110 விதியின் கீழ் வெற்று அறிவிப்புகளை தினந்தோறும் வெளியிட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அதுபோன்ற அறிவிப்பை துவரம்பருப்பு விநியோகத்திலும் செய்துள்ளாரென தமிழக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் வேளையில், தமிழகம் முழுவதும் உள்ள அங்காடிகளில் ரூ.110க்கு துவரம்பருப்பை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்கால அடிப்படையில் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications