பணம்.. பணம்னு கேட்டுகிட்டே இருந்தீங்க... கட்சியை கலைச்சுடுவேன்.... நிர்வாகிகளை மிரட்டிய விஜயகாந்த்
சென்னை: கட்சி நிர்வாகிகள் பணம் கேட்டு நச்சரித்தால் கட்சியையே கலைக்கவும் தயங்கமாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து 104 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் தோல்வி குறித்து விஜயகாந்த் தமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

ரூ10 லட்சம் என்னாச்சு?
மேலும் தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கப்படும் என்று விஜயகாந்த் கூறியிருந்தாராம். ஆனாலும் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கவில்லையாம்.

சிலருக்கு மட்டும் பணம்
தேர்தல் தோல்விக்குப் பிறகும் விஜயகாந்திடம் நிர்வாகிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ய கடந்த 5-ந் தேதி பணம் தரப்படும் எனக் கூறினார். இருந்தபோதும் சிலருக்குத்தான் இந்த பணம் கிடைத்திருக்கிறது.

நான் கடன்காரனா?
தற்போது விஜயகாந்த் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலருமே, விஜயகாந்திடம் பணத்தை தாங்க.. ரொம்ப சிரமமாக இருக்கிறது என கெஞ்சியிருக்கின்றனர். ஆனால் விஜயகாந்தோ, என்னங்க கடன்காரர் மாதிரி பணத்தை கேட்கிறீங்க? என எகிறியிருக்கிறார்.

கட்சியை கலைப்பேன்...
இந்த கோபத்தின் உச்சத்தில், இப்படியே பணம்...பணம்னு கேட்டுகிட்டே இருந்தீங்க... கட்சியையே கலைச்சுட்டுப் போகவும் நான் தயங்கமாட்டேன்... யாருகிட்ட? என மிரட்டியிருக்கிறார். இதனால் என்னதான் செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி போய் நிற்கிறார்கள் தேமுதிகவினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications