விஜயகாந்த் எடுத்த கூட்டணி முடிவு சரியானது.. அடடே, தேமுதிகவில் இருந்து சில ஆதரவு குரல்கள்!
சென்னை: விஜயகாந்த் எடுத்த கூட்டணி முடிவு மிகவும் சரியானது என்று தேமுதிக கட்சியின் திருப்பரங்குன்றம், தொகுதி எம்.எல்.ஏவான ஏ.கே.டி.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
திமுகவோடு, தேமுதிக கூட்டணி வைத்தாக வேண்டும், நாளை பிற்பகலுக்குள் இந்த முடிவை விஜயகாந்த் அறிவிக்க வேண்டும் என்று 10 மாவட்ட நிர்வாகிகளுடன் சேர்ந்து தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் இன்று மதியம் பேட்டியளித்தார்.
இவரோடு மேலும் 2 எம்.எல்.ஏக்களும் பேட்டியின்போது உடனிருந்தனர். தேமுதிக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், தேமுதிக கட்சியின் திருப்பரங்குன்றம், தொகுதி எம்.எல்.ஏவான ஏ.கே.டி.ராஜாவை நிருபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது கூறியதாவது:

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் தலைமை கூறியதற்கு கட்டுப்படத்தான் வேண்டும். சந்திரகுமார் போன்றோர் கட்சி தலைமையை மதிக்கவில்லை. தேமுதிகவில் அதிக நிர்வாகிகள், தொண்டர்கள், திமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சந்திரகுமார் கூறியது பொய். அப்படி எந்த விருப்பமும் தொண்டர்களுக்கு கிடையாது.

விஜயகாந்த் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியானதாக இருக்கும். கூட்டணி குறித்து விஜயகாந்த் எடுத்துள்ள முடிவும் மிக சரியானதுதான். இவ்வாறு ராஜா தெரிவித்தார்.
கங்கவல்லி தொகுதியின் தேமுதிக பெண் எம்.எல்.ஏவான சுபா கூறுகையில், தேமுதிகவில் இருந்து கொண்டு கலகம் செய்யும் சந்திரகுமார் போன்றோரை கட்சியினர் ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. எங்களை பொறுத்தளவில் தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சி வேறு, விஜயகாந்த் வேறு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications