திருப்பூர் மருத்துவர் சரவணன் தற்கொலை தான் செய்து கொண்டாரா? சிபிஐ விசாரிக்க விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: திருப்பூர் மருத்துவர் சரவணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து சரியான தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து வந்த திருப்பூர் சரவணன் மர்மமான முறையில் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

சரவணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அவரை கொலை செய்தார்களா என்பதே மர்மமாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்கள் நிலை என்ன என்ற மிகப்பெரிய கேள்விக்குறி அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவர்களுக்கு சரியான விளக்கத்தை அளிக்கும் வகையில், இறந்த மாணவர் சரவணன் உண்மையில் தற்கொலை தான் செய்து கொண்டாரா அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா இதுபோன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து சரியான தீர்ப்பை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கிட வேண்டும்.
மருத்துவ மாணவர் சரவணனுக்கு உரிய நியாயம் கிடைத்திட தமிழகஅரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications