அவதூறு வழக்கில் ஜெ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் உத்தரவு- விஜயகாந்த் வரவேற்பு
சென்னை: அவதூறு வழக்குகளில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தாம் வரவேற்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
காய்த்த மரம் தான், கல்லடி பெரும் அதுபோல் தேமுதிகவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத ஜெயலலிதா, என் மீதும், என் மனைவி மீதும், தேமுதிகவினர் மீதும் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல அவதூறு வழக்குகள் போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டி காட்டுவதை, சிறிது கூட சகிப்புத் தன்மை இல்லாமல் நடந்து கொள்ளும் ஜெயலலிதாவை, உச்சநீதிமன்றமே கடுமையாக கண்டித்துள்ளது.

அரசு செலவில், அரசு வழக்கறிஞர்களை போஸ்ட் மேன் போல் தன் சுய லாபத்திற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஆளுங்கட்சியால் எதிர்கட்சிகள் மீது இத்தனை வழக்குகள் போடப்பட்டதில்லை என்றும், இதுவரை எத்தனை அவதூறு வழக்குகள் ஜெயலலிதா தரப்பில் போடப்பட்டுள்ளது என்பதை 2 வாரங்களுக்குள் ஜெயலலிதாவே பதில் அளிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஒட்டு மொத்த மக்களும் ஜனநாயகத்தின் மீதும், நீதித்துறை மீதும் பலமடங்கு நம்பிக்கை கொள்ளும் அளவு அனைவராலும் வரவேற்கத்தக்க நீதியை, உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் வழங்கியுள்ளனர்.
பல அவதூறு வழக்குகள் தமிழகம் முழுவதும் போடப்பட்ட போதும், சட்டத்தை மதித்து கையொப்பம் இட வந்த ஒவ்வொரு நாளும் எங்களுக்காக வந்திருந்த மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப பல இடையூறுகளை தொடர்ந்து ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் பல சோதனைகளை தந்த போதிலும் தடைகற்களை தகர்த்தெறிந்து, படிகற்களாக மாற்றி நம் வெற்றி பயணத்தை தொடருவோம் என்ற உங்கள் ஒவ்வொருவரின் உறுதி ஈடு இணையற்றது.
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்பதற்கிணங்க, எந்த பலவீனங்களுக்கும் இடமளிக்காமல் தேமுதிக தொடங்கிய போது நாம் எடுத்து கொண்ட லட்சியத்தை வெல்லும் வரை அனைவரும் ஒன்று சேர்ந்து உறுதியோடு பயணிப்போம் என கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications