சட்டசபை கூட்டம்: நேற்று ஆப்சென்ட்டான விஜயகாந்த் இன்று பங்கேற்பாரா?
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் நேற்று அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்ற இருந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டும் கலந்து கொள்ளவில்லை. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றாவது விஜயகாந்த் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. 19 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

முதல் நாளான நேற்று மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வென்றதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
சட்டசபையில் நேற்று தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி என அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.
ஆனால் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் பங்கேற்க முடியாது. அதே நேரத்தில் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபைக்கு வருகை தந்திருந்தனர்.
பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று விஜயகாந்த் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று பிறந்த நாளை கொண்டாடும் விஜயகாந்த் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications