கும்மிடிபூண்டியில் நாளை மறுநாள் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கிறார் விஜயகாந்த்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது தேர்தல் பிரசாரத்தை வரும் 11ம் தேதி கும்மிடிபூண்டியில் ஆரம்பிக்கிறார்.
மக்கள் நல கூட்டணியுடன், கூட்டணி வைத்துள்ளது தேமுதிக. அக்கட்சியின் பிரேமலதா, சுதீஷ் போன்றோர் தீவிர பிரசாரம் நடத்தி வரும் நிலையில், விஜயகாந்த் ஏன் இன்னும் பிரசாரம் செய்யவில்லை என்ற கேள்வி பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் போன்றோராலும், ஊடகங்களாலும் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்த் வரும் 11ம் தேதி முதல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் தேர்தல் பிரசாரத்தை துவங்க உள்ளார். அன்று திருவள்ளூர் கிழக்கு மற்றும் வடசென்னை மாவட்டத்தில் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். 12ம் தேதி காஞ்சிபுரம் வடக்கு, மேற்கு சென்னை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். ஏப்ரல் 14ல் காஞ்சிபுரம் தெற்கு, தென் சென்னை மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக ஏற்கப்பட்ட விஜயகாந்த்தும் பிரசார களத்தில் குதிப்பதால் அரசியல் களம் சூடு பறக்கிறது.












Click it and Unblock the Notifications