காங்கிரஸ் முதற்கட்டவேட்பாளர் பட்டியல்.. விளவங்கோடு - விஜயதாரணி, நாங்குநேரி - வசந்தகுமார் போட்டி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டெல்லி சென்றார். வேட்பாளர் தேர்வு தொடர்பாக அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பார்வையாளருமான முகுல் வாஸ்னிக்குடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சோனியா காந்தியின் இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, 33 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது.
இதில் தற்போதைய விளவங்கோடு சட்டசபை தொகுதி சிட்டிங் எம்எல்ஏவான விஜயதாரணி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதரணி. தற்போது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் விஜயதாரணிக்கு மீண்டும் அதே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு தலைவர் வசந்தகுமார் நாங்குநேரி தொகுதியில் களமிறங்குகிறார். தொழிலதிபரான இவர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டசபை தொகுதியில் 2006-இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இதே தொகுதியில் 2011-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் எம்.பி. ஆரூண் மகன் ஹசன் மவுலானா அம்பத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications