தினகரன் குரூப்பில் விளாத்திகுளம் எம்எல்ஏ உமா மகேஸ்வரி.. தினகரனிடமிருந்து விலகினார் "தோப்பு"!
Recommended Video

சென்னை: தினகரன் தரப்புக்கு ஆதரவாக மாறியுள்ளார் விளாத்திகுளம் எம்எல்ஏ உமா மகேஸ்வரி. இதுவரை தினகரன் ஆதரவு நிலையில் இருந்த பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் அணி மாறியுள்ளார்.
பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவை இன்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சந்தித்தனர். இந்தக் குழுவில் மொத்தம் 19 எம்எல்ஏக்கள் இடம் பெற்றிருந்தனர்.

25 பேர் வரை தினகரன் தரப்பில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 19 பேர் மட்டுமே வந்திருந்தனர். இதில் கூட உமா மகேஸ்வரி புதுமுகம் ஆவார். இதுவரை அவர் மாற்று அணியில் இருந்து வந்தார். இன்று காலை வந்த குழுவில் இவரும் இடம் பெற்றுள்ளார்.
அணி மாறிய தோப்பு
இதற்கிடையே தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம் தினகரன் ஆதரவு நிலையிலிருந்து விலகியுள்ளார்.
முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக அவர் மாறியுள்ளார்.
இன்று ஆளுநர் மாளிகைக்கு வந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விவரம்:
செந்தில் பாலாஜி, கோதண்டபாணி, ஆம்பூர் பாலசுப்பிரமணியன், மாரியப்பன் கென்னடி, ஏழுமலை, சுப்பிரமணி, கதிர்காமு, டாக்டர் முத்தையா, தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், பழனியப்பன், அரூர் முருகன், ரங்கசாமி, தங்கதுரை, ஜக்கையன், சுந்தரராஜன், சோளிங்கர் பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், உமா மகேஸ்வரி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications