பிரசாரத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு: ஓட்டம் பிடித்த; திரும்பிய அமைச்சர்
திருச்சி: கரூர் தொகுதியில் மணப்பாறை அருகே ஓட்டு கேட்க வந்த தம்பித்துரை எம்.பியை முற்றுகையிட முயன்ற கிராம மக்களை தாக்க முயன்றதாக அதிமுகவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் கரூர் தொகுதி வேட்பாளராக தற்போதைய எம்.பி. தம்பிதுரை மீண்டும் போட்டியிடுகிறார். திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, கருங்குளம் கிராமத்துக்கு சென்றார். ஆனால், அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி காலி குடங்களுடன் தம்பிதுரையை முற்றுகையிட முயன்றனர். ஆனால் தம்பிதுரையின் பிரசார வாகனம் மக்கள் திரண்டிருந்ததை பார்த்ததும் நிற்காமல் வேகமாக, அருகே உள்ள ஊத்துக்கோட்டை கிராமத்துக்கு சென்று விட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.

ஆனால், தம்பிதுரையுடன் இருந்த அதிமுகவினர் அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், ஒரு சிலர் பொதுமக்களை தாக்க முயன்றனர். இதுபற்றி, வையம்பட்டி போலீசில் பொதுமக்களில் சிலர் புகார் கொடுத்தனர்.
அமைச்சருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
இதேபோல தர்மபுரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று காலை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், வேட்பாளர் மோகன் மற்றும் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், லலிதானூர் கிராமத்தில் குடிநீர், சாலை வசதி, வறட்சி நிவாரணம் ஆகியன உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும், நத்தம் காலனி பிரச்னையில் தொடர்பில்லாதவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்ததாகவும் கூறி அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்க பொதுமக்கள் காத்திருந்தனர்.
மேலும் நத்தம் காலனி பிரச்னையில், அதிமுகவினர் யாரும் அப்பகுதி மக்களுக்கு ஆறுதலாக செயல்படவில்லை என்றும், வாக்கு சேகரிக்க வரும் அதிமுக அமைச்சர் பழனியப்பன் காரை முற்றுகையிடவும் திட்டமிட்டு லலிதானூர் கிராமத்தின் மையப்பகுதியில் மக்கள் திரண்டனர்.
இது குறித்த தகவல் அறிந்த அமைச்சர் பழனியப்பன் மற்றும் அதிமுகவினர் ஊருக்குள் செல்லாமல் கிராம எல்லையிலேயே வாக்கு கேட்டு விட்டுச் சென்றனர்.
பிரசாரம் செய்யச் சென்ற இடத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரசாரத்திற்கு செல்லாமல் அதிமுக அமைச்சர் திரும்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications