ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்.. நாகை அருகே 200 பேர் கைது!
நாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை: நாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 22 நாட்கள் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த படாது என மத்திய அரசு உறுதியளித்தது.

இதையடுத்து நெடுவாசல் கிராம மக்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். அந்த கேப்பில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த திங்கட் கிழமை மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நாகை மாவட்டம் மேலக்குருவாடியில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கைகளில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணறு அருகே போராட்டம் நடத்திய கிராம மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இதையடுத்து போரட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications