விஜயகாந்துக்கு விழுப்புரம் கோர்ட் 'வார்னிங்'... ஆக. 16-ல் கண்டிப்பாக ஆஜராக உத்தரவு
விழுப்புரம்: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கண்டிப்பாக ஆக.16-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் 2012-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதேபோல, 2014 பிப்ரவரி 2-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டத்திலும், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அப்போது எம்எல்ஏக்களாக இருந்த பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக முதல்வரையும், அரசையும் விமர்சித்துப் பேசியதாக விழுப்புரம் அரசு வழக்கறிஞர் பொன்.சிவா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகளின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு விலக்கு பெற்றனர். மேலும், உச்ச நீதிமன்றத்திலும் தடை ஆணை பெற்றனர்.
இதனால் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் 19-ந் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, வழக்கில் தொடர்புடைய விஜயகாந்த், பிரேமலதா, வெங்கடேசன், பார்த்தசாரதி ஆகியோர் ஜூலை 26-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி 26-ந் தேதி பார்த்தசாரதி, வெங்கடேசன் மட்டுமே ஆஜராகினர்.
விஜயகாந்த், பிரேமலதா ஆஜராகவில்லை. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் அடுத்த விசாரணையின் போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் மட்டும் ஆஜரானார். விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி ஆகியோர் ஆஜராகவில்லை. இதுதொடர்பாக அவர்களது வழக்கறிஞர் பாலாஜி மனு கொடுத்தார்.
இதை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, கடந்த 2 வாரங்கள் அவகாசம் வழங்கியும் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் ஏன் ஆஜராகவில்லை? நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும். முன்புதான் வருவதற்கில்லை என்று காரணம் கூறினார்கள், இப்போது என்ன செய்கின்றனர்? நீங்கள்தான் அவர்களை அழைத்து வந்து ஆஜர்படுத்தியிருக்க வேண்டும் என்று, அவரது வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
வருகிற 16-ந் தேதி விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி ஆகியோர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். அன்றைய தினம் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது தொடர்பான ஆவணங்களின் நகலை அவர்கள் வழங்க வேண்டும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications