பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதூர்த்தி விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் - வீடியோ
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதூர்த்தி விழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இனி பத்து நாட்களுக்கு திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது பிள்ளையார்பட்டி திருத்தலம். இங்கு வருடம்தோறும் ஆகஸ்டு மூன்றாம் வாரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிக விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்நிலையில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இனி பத்து நாட்களுக்கு சதுர்த்தி திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும். மேலும், கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications