இது காவிரித் தாய்க்கும், கனியை திகாருக்கு அனுப்பியவருக்கும் இடையேயான தேர்தல்: விந்தியா

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: இந்த தேர்தல் மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல சக்தியான ஜெயலலிதாவுக்கும், ஊழலே நான், ஊழலுக்காக நான் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கருணாநிதிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர். ராஜேந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் திமுக தலைவர் கருணாநிதியை தாக்கிப் பேசினார்.

விந்தியா கூறுகையில்,

கருணாநிதி

கருணாநிதி

அதிமுக அமைதி, வளர்ச்சி, வளம் ஆகிய தாரக மந்திரத்தை கொண்டு செயல்படுகிறது. இந்த தேர்தல் காவிரி நீரை மீட்டு வந்த ஜெயலலிதாவுக்கும், கனிமொழியை திகார் சிறைக்கு அனுப்பி வைத்த கருணாநிதிக்கும் இடையேயான தேர்தல்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

இந்த தேர்தல் மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல சக்தியான ஜெயலலிதாவுக்கும், ஊழலே நான், ஊழலுக்காக நான் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கருணாநிதிக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

இரட்டை இலை

இரட்டை இலை

இரட்டை இலைக்கு வாக்களித்தால் நம் குடும்பம் நன்றாக இருக்கும். உதயசூரியனுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குடும்பம் நன்றாக இருக்கும். அம்மாவின் திட்டங்களை அண்ணாவின் திட்டங்களாக மாற்றுவதாக கூறுகிறார்கள். அதற்கு பதில் அவர்கள் திமுகவை அண்ணா திமுகவாக ஆக்கலாம்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல் என்கிறார் விஜயகாந்த். தர்மம் தனியாக வரும். அதர்மம் தான் ஆள் சேர்த்துக் கொண்டு வந்து தோல்வி அடையப் போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+