கேப்டன் சார் தங்கமான மனுஷன்.. மிஸ் யூ சார்!.. டிரென்டாகும் விருத்தாசலம் பெண்ணின் பேஸ்புக் பதிவு!
விருத்தாசலம்: கேப்டன் விஜயகாந்த் தங்கமான மனுஷன் என விருத்தாசலத்தை சேர்ந்த பெண் ஒருவர் போட்ட பேஸ்புக் பதிவு வேகமாக பரவி வருகிறது.
விஜயகாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக எனும் கட்சியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் தேமுதிக போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வென்றார். மற்ற தேமுதிக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

இதையடுத்து விஜயகாந்த் அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியிருந்தார். அப்படி அவர் செய்த பணிதான் இலவச கணினி பயிற்சி. இதை தன்னார்வல நிறுவனங்கள் மட்டுமே நடத்தி வந்த நிலையில் அரசு சார்பில் விஜயகாந்த் நடத்தி காட்டினார்.
அந்த இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மூலம் பலனடைந்தவர்களில் ஜெயமணி என்ற பெண் தற்போது பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் எங்க ஊர் விருத்தாசலம்ல தான் முதன்முறையா MLA ஆனார். அப்போ கம்ப்யூட்டர் class பத்தி எல்லாம் யோசிச்சுக்கூட பார்க்க முடியாத எங்கள போல எத்தனையோ middle class ladiesக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு.
இது மட்டும் இல்லாம இலவச தையல் பயிற்சி வகுப்பும் இருந்துச்சு. சினிமால கேப்டன் ah ரொம்ப பிடிச்சாலும் எங்க ஊர் mla வா அவர பாத்து பேசினது இன்னும் அவர் மேல் பாசமும் பிரமிப்பும் அதிகமாச்சு
தங்கமான மனுஷன் . Miss you sir 🙏🙏 என பதிவிட்டுள்ளார். அதில் அந்த பெண் கணினி பயிற்சி பெற்று முடித்த போது கொடுக்கப்பட்ட சான்றிதழின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
சினிமா துறையிலும் அரசியல் துறையிலும் நன்மைகளையே செய்த விஜயகாந்த் இன்று நம்மோடு இல்லை. அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சினிமாவில் நடித்த போது பாரபட்சங்களை மாற்றியவர் விஜயகாந்த், டாப் ஹீரோ, ஹீரோயின்களுக்கு கொடுப்பதை போல் எல்லாருக்கும் ஒரே சாப்பாடு வழங்க வேண்டும்.
ஊழியர்களுக்கு சைவம், அசைவம் என எது கேட்கிறார்களோ அதைத்தான் தர வேண்டும் என்றெல்லாம் அவர் உத்தரவிட்டிருந்தார். அது போல் சாப்பாட்டு விஷயத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மனதில் கொண்டு திநகரில் அவருடைய அலுவலகத்தில் தினமும் சாப்பாடு போடுவார். புதிதாக சினிமாவில் வாய்ப்பு தேடுவோர் எல்லாம் விஜயகாந்த் அலுவலகத்திற்கு வந்தால் சாப்பாடு கிடைக்கும் என வருவார்கள்.
அது போல் விஜயகாந்த் இதுவரை 54 புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில் டெக்னீஷியன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனால் விஜயகாந்தின் அலுவலகத்திற்கு போனால் வாய்ப்பும் கிடைக்கும் வயிறார சாப்பாடும் கிடைக்கும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications