பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்- முதலிடத்தை தட்டி சென்ற ஈரோடு... சென்னைக்கு 17வது இடம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10ஆம் வகுப்பு தேர்வுகளில் 98.04% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் விருதுநகர் மாவட்டம் இம்முறை 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையோ 17வது இடத்துக்கு போயுள்ளது.

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Virudhunagar district again fails to retain first place in overall pass percentage

முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் சாதனை படைத்துள்ளனர். அதேபோல் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை லட்சக்கணக்கான மாணவர்கள் பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் எப்போதும் விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில் இருந்து வந்தது. 2012ஆம் ஆண்டு வரை சுமார் 26 ஆண்டுகாலம் இந்த சாதனையை நிகழ்த்தி வந்த விருதுநகர் மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறத் தொடங்கியது.

இந்த ஆண்டும் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை தவறவிட்டு 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி சதவீதம்:

1) ஈரோடு - 98.04%

2) விருதுநகர் - 97. 98%

3) திருச்சி - 97.62%

4) கன்னியாகுமரி - 97.27%

5) பெரம்பலூர் - 97.25%

6) சிவகங்கை- 96.75%

7) தூத்துக்குடி- 96.74%

8) ராமநாதபுரம் - 96.37%

9) நாமக்கல் - 95.83%

10) கரூர் - 95.76%

11) கோவை - 95.65%

12) திருப்பூர்- 95.23%

13) நெல்லை - 94.23%

14) மதுரை- 94.21%

15) தஞ்சாவூர்- 94.18%

16) நீலகிரி - 94.09%

17) சென்னை- 94.04%

18) தருமபுரி- 94%

19) கிருஷ்ணகிரி- 93. 99%

20) சேலம் - 93.2%

21) திண்டுக்கல் - 92.97%

22) காஞ்சிபுரம்- 92.79%

23) புதுக்கோட்டை- 91.76%

24) திருவாரூர்- 83.78%

25) தேனி- 90.87%

26) அரியலூர்- 90.7%

27) திருவள்ளூர்- 90.5%

28) நாகப்பட்டினம் - 89.27%

29) வேலூர்- 88.68%

30) கடலூர்- 86.65%

31) திருவண்ணாமலை - 85.42%

32)திருவாரூர்- 83.78%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+