தந்தி சர்வே: சட்டசபைக்குள் செல்லும் விஜயகாந்த் வாரிசு? விருதுநகரில் விஜய பிரபாகரனுக்கு அமோக ஆதரவு?
விருதுநகர்: விருதுநகர் தொகுதி சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை எம்பியாகும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட விஜய பிரபாகரன், இந்த முறை சட்டசபைக்கு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாடுபடுகிறது. அது போல் அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தந்தி டிவி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் தொகுதியில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்பதை பார்க்கலாம்.
கர்மவீரர் காமராஜர் பிறந்த மாவட்டமான விருதுநகர் சட்டசபை தொகுதியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகர், அதிமுக சார்பில் வி.ஜி.கணேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் லட்சுமணன், தவெக சார்பில் செல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
விருதுநகரில் தேமுதிகவுக்கு 38 முதல் 44 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். அது போல் அதிமுகவுக்கு 35 முதல் 41 சதவீதம் வரையும் தவெகவுக்கு 11 சதவீதம் - 17 சதவீதம் வரையும் நாதகவுக்கு 2 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இளம் வேட்பாளர், விஜயகாந்தின் செல்வாக்கு, ஜாதி வாக்குகள் எல்லாம் சேர்ந்து விஜய பிரபாகரனுக்கு பெரும் ஆதரவை கொடுக்கிறது என்கிறார்கள்.
எனவே விருதுநகர் சட்டசபை தொகுதியில் விட்டதை சட்டசபை தொகுதியில் பிடிக்கிறாரா விஜய பிரபாகரன்?
விருதுநகர் சட்டசபைத் தொகுதியானது தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியாகும், குறிப்பாகப் பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டு வென்ற பெருமை இதற்கு உண்டு. ஆரம்பக் காலங்களில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்த இந்தத் தொகுதியில், காலப்போக்கில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் வலுவான இடத்தைப் பிடித்துள்ளன.
குறிப்பாக, கடந்த 2006, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க-வைச் சேர்ந்த ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தொடர்ந்து வெற்றி பெற்று இத்தொகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு தேமுதிகவை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் வென்றார். அதற்கு முன்னதாக ம.தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளும் இங்கு வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த இத்தொகுதியில், கடந்த காலங்களில் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கும், சாதி ரீதியான வாக்கு வங்கிகளும் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக இருந்துள்ளன. 2021 தேர்தலில் தி.மு.க-வின் சீனிவாசன், அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ஜ.க வேட்பாளர் ஜி. பாண்டுரங்கனைத் தோற்கடித்தார். காமராஜர் காலத்திலிருந்தே தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் ஒரு உற்றுநோக்கப்படும் தொகுதியாக விருதுநகர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications