விருதுநகர் லோக் அதாலத்தில் 11,081 வழக்குகளுக்கு தீர்வு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட லோக் அதாலத்தின்போது 11081 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடைபெற்றது.

Viruthunagar Lok Adalat disposes 11,081 cases today

அப்போது, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நில எடுப்பு வழக்குகள், சிவில் வழக்குகள், பிறப்பு இறப்பு வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட இதர வழக்குகள் என 11911 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதில் 11081 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2,49,53,383-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வங்கிகளில் நிலுவையில் உள்ள வராக்கடன்கள் மனுக்கள் 4851 பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, 420 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.3,33,45,160-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதில் ரூ.49,02,085 உடனே வசூல் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை நீதிமன்ற முதன்மை நிர்வாக அதிகாரி ரவீந்திரன், மாவட்ட நீதிமன்ற பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நீதிமன்ற மேலாளர் மைக்கேல்தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+