குரல் கொடுத்த திரிஷாவுக்கு நன்றி சொன்ன விசாகா.. ஆனால் போட்ட வேகத்தில் "டெலிட்" செய்த திரிஷா!
சென்னை: தனது பேஸ்புக்கில் ஆபாசமாக கமெண்ட் போட்ட நபரை கடுமையாக சாடி பதிலடி கொடுத்த நடிகை விசாகா சிங்குக்கு திரையுலகிலிருந்து நடிகை திரிஷா மட்டுமே பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்காக திரிஷாவுக்கு நன்றி கூறியுள்ளார் விசாகா சிங்.
அதேசமயம், திரையுலகிலிருந்து மற்ற யாரும் தனக்காக குரல் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தையும் அவர் வெளி்ப்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களின்போது பாய்ந்து பாய்ந்து கமெண்ட் போடும் பாலிவுட் நடிகைகள் யாருமே வாயையே திறக்கவில்லை. வழக்கமாகவே கோலிவுட்டுக்கு இதுமாதிரியான விஷயமெல்லாம் புரியாது. இப்போது சுத்தம்.. திரிஷாவைத் தவிர வேறு யாருமே பேசவில்லை, வாய் திறக்கவில்லை.
எந்த ஒரு நடிகரும் இதுபோன்ற சம்பவங்களின் போது வாய் திறக்காமல் இருப்பது பாரம்பரியமாக தொடர்கிறது. சக கலைஞர் ஒருவருக்கு, குறிப்பாக நடிகைக்கு பிரச்சினை வரும்போது நடிகர்கள்தான் திரண்டு வந்து அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும். ஆனால் நமது நடிகர்கள் அது போலச் செய்வதில்லை. குறைந்தபட்சம் விசாகாவுடன் ஹீரோவாக நடித்த சந்தானம் கூட இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
தமிழ் சினிமாவில் பல புரட்சி நடிகைகள் உள்ளனர். அவர்களும் கூட கண்டு கொள்ளவில்லை. திரிஷா மட்டுமே கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திரிஷா தனது டிவிட்டர் ஹேன்டிலில் போட்டிருந்த கருத்தில், விசாகா சிங் கிரேட். இதுபோன்ற கோழைகளை துணிவுடன் சந்தித்த விதம் அருமை என்று பாராட்டியிருந்தார்.
இதற்கு விசாகா சிங் பாராட்டும், நன்றியும் தெரிவித்து பதில் டிவிட் போட்டிருந்தார். அதில், திரையுலகில் மூத்த நடிகையிடமிருந்து கிடைத்த பாராட்டு மகிழ்ச்சி தருகிறது. திரிஷா, நீங்கள்தான் நடிப்புலகிலிருந்து எனக்காக குரல் கொடுத்த முதல் நபர் என்று மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
டிவிட்டை தூக்கிய திரிஷா
ஆனால் தற்போது திரிஷா தனது டிவிட்டை டெலிட் செய்து விட்டார். அது ஏன் என்று தெரியவில்லை. தேவையில்லாமல் தனக்கு பிரச்சினை எதற்கு என்று கருதி டெலிட் செய்தாரா அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை.
மற்றபடி விசாகா சிங்கின் கோபத்துக்கு ஆதரவாக எந்த நடிகையும், நடிகரும் வந்ததாக தெரியவில்லை. ஏன் என்றும் புரியவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications