கொலை மிரட்டல் விவகாரம்... பாதுகாப்பு கேட்டு நடிகர் விஷால் போலீசில் புகார்
சென்னை: தனக்கு கொலை மிரட்டல் வருவதால் தனக்கும் தனது அலுவலகத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் தற்போது பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் இன்னொரு அணியினரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வருகிற 18-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடக்கிறது, இதனையொட்டி விஷால் தலைமையிலான அணியினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷாலின் மொபைலிற்கு தேவையில்லாத எண்களில் இருந்து போன் கால்கள் வருவதாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகார் மனுவில் "நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் எனக்கு தேவையில்லாத எண்களில் இருந்து போன் செய்து பேசும் சிலர் மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எனது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சரத்குமார் எழும்பூர் கோர்ட்டில் நடிகர் விஷால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications