கங்கை அமரன், விஷால், தீபாவுக்கு நல்ல காலம்... போட்டியிடாம எஸ்கேப் ஆகிட்டாங்க!
கங்கை அமரன், விஷால், தீபா மூன்று பேரும் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடாமல் போனதன் மூலம் பெரிய தோல்வியில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: ஆர்.கே நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கங்கை அமரன், விஷால், தீபா ஆகிய மூவரும் போட்டியிடவில்லை.
ஒருவேளை எல்லாம் சரியாக கை கூடி வந்து இவர்கள் போட்டியிட்டு இருந்தால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அரசியலில் இவர்களுக்கு இது பெரிய அனுபவமாக அமைந்துள்ளது.
சென்ற தேர்தலில் போட்டியிட்ட கங்கை அமரன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த விஷால், தீபா ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

முன்னிலை வகிக்கும் தினகரன்
ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையின் 4 சுற்றுகளிலும் தினகரன் முன்னிலை வகிக்கிறார். 20 ஆயிரம் வாக்குகளை தாண்டி சென்று கொண்டு இருக்கிறார். அதே சமயத்தில் மற்ற எந்த வேட்பாளரும் 10 ஆயிரம் வாக்குகள் கூட எடுக்காமல் பின் தங்கி உள்ளனர். முக்கியமாக தேசிய கட்சியான பாஜக டெபாசிட் இழக்கும் நிலைமையில் இருக்கிறது.

கங்கை அமரன் எஸ்கேப்
சென்ற முறை ஆர்.கே நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பாஜக வேட்பாளராக அங்கு களம் இறங்கியவர் கங்கை அமரன். ஆனால் எம்.எல்.ஏ ஆகும் அவரது கனவு நிறைவேறாமல் போய், தேர்தல் பாதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அறிவிக்கப்பட்ட தேர்தலில் அவர் பாஜக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. தற்போது பாஜக கட்சி நோட்டாவைவிட குறைவாக வாக்குகள் வாங்கி இருக்கும் நிலையில், கங்கை அமரனுக்கு இந்த சனி பெயர்ச்சி மிகவும் நன்றாகவே இருந்துள்ளது என்று கூறலாம்.

ஜெ.தீபா
எப்படியாவது இந்த தேர்தலில் போயிட்டுவிடலாம் என்று கடைசி வரை முயற்சி செய்து கொண்டு இருந்தார் ஜெ.தீபா. ஆனால் வேட்புமனுவில் இவர் செய்த தவறு காரணமாக கடைசியில் போட்டியிட முடியாமல் போனது. ஒருவேளை இவர் போட்டியிட்டு இருந்தால் இவருக்கும் டெபாசிட் கிடைப்பது கஷ்டமாக போய் இருக்கும். நல்லவேளை மிகப்பெரிய அரசியல் தோல்வியில் இருந்து தப்பித்து இருக்கிறார்.

விஷாலுக்கு நல்ல காலம்
நடிகர் விஷால் இந்த தேர்தல் அறிவிப்பில் இருந்தே டிரெண்டிங்கில் இருந்தார். பல பிரச்சனைகளுக்கு பின்பும், சர்ச்சைகளுக்கு அடுத்தும் இவரது வேட்புமனு நிராகரிக்கப்ட்டது. அப்போது இதுதான் அரசியல் என்று பலரும் விஷாலை கேலியாக பேசினார்கள். ஆனால் தற்போது அந்த அரசியலே அவருக்கு நல்ல செய்தியை அளித்து இருக்கிறது. அவரது வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டு இருந்தால், அவரது அரசியல் வாழ்க்கை இதைவிட மோசமாக மாறியிருக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications