கடன் விவகாரத்தில் போலீசால் தாக்கப்பட்ட விவசாயி பாலனுக்கு நடிகர் விஷால் உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிராக்டர் விவகாரத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட விவசாயி பாலனுக்கு, உதவ நடிகர் விஷால்முன்வந்திருக்கிறார்.

தஞ்சாவூர் விவசாயி பாலன் தாக்கப்பட்ட செய்தி, தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரூ.9௦௦௦ கோடி கடனுடன் நாட்டை விட்டு ஓடிப்போன விஜய் மல்லையாக்களை விட்டுவிடுபவர்கள், கடனை நேர்மையாக கட்ட நினைக்கும் அப்பாவி மக்களை துன்புறுத்துகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் இது குறித்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

Vishal Helps for Farmer Balan

பாலனைத் தாக்கிய விவகாரத்தில் விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஷால் விவசாயி பாலனுக்கு உதவ முன்வந்திருக்கிறார். அவர் இது குறித்து "பாலன் நீங்கள் யாரென்றே தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு விவசாயி என்பதற்காக உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்.

உங்கள் கடன் தொகை எவ்வளவு என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய உதவியை ஏற்றுக் கொள்ளுங்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+