ரஜினியைச் சந்தித்த விஷால் அணி... அடுத்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கிறார்கள்!

Subscribe to Oneindia Tamil

விஷால் தலைமையிலான 'பாண்டவர் அணி' இன்று ரஜினியைச் சந்தித்து நடிகர் சங்க தேர்தலில் ஆதரவு கோரினர்.

செப்டம்பர் 1ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக சரத்குமார் மற்றும் அவருக்கு எதிரான விஷால் குழுவினர் வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை நடிகர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் குழுவில் நாசர், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

Vishal and team meet Rajinikanth today

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு ரஜினியைச் சந்தித்தனர் விஷால் குழுவினர்.

இந்தத் தேர்தலில் வாக்களிக்க வருமாறு ரஜினியைக் கேட்டுக் கொண்ட விஷால் குழு, தங்கள் அணிக்கு ஆதரவு கோரினர்.

விஷாலுடன் நாசர், பொன்வண்ணன், கார்த்தி ஆகியோரும் சென்றிருந்தனர். அனைவரையும் வரவேற்ற ரஜினி, பின்னர் புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.

அடுத்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்கப் போவதாக விஷால் குழுவினர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+