விசில் ஆப்க்கு இந்தியாவின் சிறந்த செயலிக்கான மெடல்.. கமல் பெருமிதம்!

இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளி மெடல் மக்கள் நீதி மய்யத்தின் விசில் மெடலுக்கு கிடைத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளி மெடல் மக்கள் நீதி மய்யத்தின் விசில் மெடலுக்கு கிடைத்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் கடந்த ஏப்ரல் மாதம் விசில் செயலியை அறிமுகப்படுத்தினார். விசில் செயலி காவல்துறைக்கு உதவுவதாகவும், விமர்சனம் செய்யக்கூடியதாகவும் இருக்கும் என்று கூறினார்.

Visil app gets silver Medal for best social work

அதன்படி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை விசில் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தார். அதன்படி மக்களும் தங்களின் குறைகளை விசில் ஆப்புக்கு அனுப்பினர். அதனை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார் கமல்.

[கமல்ஹாசன் பொய் சொல்கிறார்.. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி]

இதனால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது விசில் செயலி. இந்நிலையில் இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளி மெடலை மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலி பெற்றுள்ளது.

இதுதொடர்பாக கமல்ஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்திய அளவிலான MMA_APAC விருதுகளில், maiamofficial கட்சியின் மய்யம் விசில் செயலி, வணிக நோக்கமில்லாமல், சமூக தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக, இந்தியாவின் சிறந்த செயலியாக "வெள்ளிப் பதக்கமும்", புவி சார்ந்த தகவல் தொடர்பு சேவையில் "வெண்கலப் பதக்கமும்" பெற்றுள்ளது.

ஒரு அரசியல் கட்சியாக இது வரை யாருக்கும் கிடைத்திராத அங்கீகாரம். மக்கள் பிரச்சனைகளை
கருத்துடன் அணுகி, அதை தீர்ப்பதற்கு மய்யம் விசில் செயலியைப் பயன்படுத்தி, இவ்விருதுகள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திடக் காரணமாகிய எங்கள் களவீரர்களுக்கும், களவீராங்கனைகளுக்கும்,நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+