கமல்ஹாசன் பொய் சொல்கிறார்.. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Recommended Video

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு, நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் கூறியதாவது: தமிழகம் மட்டுமல்ல உலகமெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களின் நெஞ்சில் நிறைந்துள்ளவர் எம்ஜியார். சென்னையில் அவரின் நூற்றாண்டு விழா எழுச்சியுடன் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா எழுச்சியுடன் கொண்டாடப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் 31 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, அரசு விழாவாக நடைபெற்றது.
[இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்.. பீதியை கிளப்பும் கோவை காலநிலை ஆய்வு மையம் தகவல்!]

7 லட்சம் பேர் பங்கேற்பு
32 ஆவது மாவட்டம் சென்னை. எம் ஜி ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இங்கு நாளை நடைபெறும். அதிமுகவின் அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்கள், எம்ஜிஆர் ரசிகர்கள், என 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதுவரை சென்னையில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது இல்லை என்று சொல்லும் அளவிற்கு மாபெரும் நிகழ்ச்சியாக இருக்கும்.

மதியம் விழா துவக்கம்
நாளை மதியம் 3 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். வாழ்நாளிலேயே எம்ஜிஆர் சீர்திருத்த பாடல்கள் பலவற்றை வழங்கினார். சமூக மாற்றத்திற்கான அந்த பாடல்களை லஷ்மன் ஸ்ருதி குழுவினர் இசைத்து காண்பிக்கிறார்கள். விழா அழைப்பிதழ் அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரிடம் கலை உலகத்தில் யார் எல்லாம் நெருங்கி பழகினார்களோ அவர்களை எல்லாம் அடையாளம் கண்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அழைப்பிதழ் அனுப்பபடவில்லை என்ற கூற்றை நான் முற்றிலும் மறுக்கிறேன். அதில் சிறிதும் உண்மை கிடையாது.

நெருங்கும் திருமா
அரசியல் கட்சி சார்பில் யாரையும் அழைக்க முடியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூட தன்னை அழைத்தால் வருவேன் என்று தெரிவித்தார். எங்களோடு அவர் நெருங்கி வருகிறார் என்பதைத் தான் காட்டுகிறது. அவருக்கு, எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாலை ஆக்கிரமிப்பு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலையை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுவதில் உண்மை இல்லை. அனைத்து பேனர்களும் அனுமதி வாங்கித்தான் வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி எங்காவது பேனர் வைக்கப்பட்டு இருந்தால் எங்களுக்கு தகவல் தெரிவித்தால் நாங்கள் அதை அகற்ற நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications