வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்றும் விவேக், கிருஷ்ணப்பிரியாவிடம் விசாரணை
சசிகலா உறவினர்களான விவேக், கிருஷ்ணபிரியா, டாக்டர் வெங்கடேஷ் இன்று வருமான வரித்துறை அலுவகத்தில் ஆஜராக உள்ளனர்.
சென்னை: வருமான வரித்துறை அலுவலகத்தில் இளவரசி மகன் விவேக் இன்றும் ஆஜராகிறார். அவரிடம் ஜாஸ் சினிமாஸ் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
சசிகலாவின் அண்ணன் மகனான விவேக், ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸை நிர்வகித்து வருகிறார். சத்யம் குழுமத்திடம் இருந்து ஜாஸ் சினிமாஸை ரூ1,000 கோடிக்கு சசிகலா குடும்பம் வாங்கியதாக சர்ச்சை எழுந்திருந்தது.

தற்போதைய வருமான வரி சோதனையிலும் ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அத்துடன் ஜாஸ் சினிமாஸ் குத்தகைக்கு எடுக்கப்பட்டதா? அல்லது வாங்கப்பட்டதா? என்பது குறித்து விரிவான ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் விவேக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
மேலும் ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கும் வருமான வரித்துறையினர் உத்தரவிட்டிருந்தனர். இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜாஸ் சினிமாஸ் தொடர்பாக விவேக்கிடம் விசாரணை நடைபெற உள்ளது.
விவேக்கின் சகோதரி கிருஷ்ணப்பிரியா, உறவினர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரையும் இன்று ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சசிகலா உறவினர்களான விவேக், கிருஷ்ணபிரியா, டாக்டர் வெங்கடேஷ் இன்று வருமான வரித்துறை அலுவகத்தில் ஆஜராக உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications