கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தை அரசியல் கட்சியாக்கிடுங்க சார்: பொன்ராஜுக்கு கோரிக்கை
ராஜபாளையம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக துவங்கப்பட்டுள்ள கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தை கட்சியாக மாற்றுமாறு அவரது அரசியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜை மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
மாணவ, மாணவியர் மனம் விரும்பும் தோழனாக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக கலாம் லட்சிய இந்தியா இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு பெற்ற இளைஞர்கள் மற்றும் லட்சியத்தை அடையும் மாணவர்களை உருவாக்கி அழகு பார்ப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்.
இயக்கத்தின் கொடி மற்றும் லோகோவை கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் அறிமுகப்படுத்தி வைத்தார். இயக்கம் பற்றி பொன்ராஜ் கூறுகையில்,
நாட்டின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு உதவி செய்யும் தலைவர்களுக்கு பஞ்சமாக உள்ளது. அதனால் தான் இப்படி தேக்க நிலை உள்ளது. தனித்திறமையை வளர்த்துக் கொள்ளும் மாணவர்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றார்.
இந்நிலையில் இயக்கத்தை அரசியல் கட்சியாக்கிவிடுமாறு பலர் பொன்ராஜிடம் தெரிவித்து வருகிறார்கள். அவரோ பதில் அளிக்காமல் அமைதியாக இருக்கிறார். அமைதிக்கு பின்னால் ஏதோ மெசேஜ் உள்ளதோ?












Click it and Unblock the Notifications