ஜெயலலிதாவை முட்டித்தள்ளிய யானை: வேலூரில் வெளுத்து வாங்கிய ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ஜெயலலிதா நாட்டு மக்களை போய் பார்ப்பதில்லை. ஆனால், காட்டில் போய் மிருகங்களை பார்த்து ரசிக்கிறார். அப்போது, அவர் மீது கோபம் கொண்ட ஐந்தறிவு உள்ள யானை, எட்டி உதைத்தது என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அப்துல்ரகுமானை ஆதரித்து, வேலூர் மண்டித் தெருவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், திறந்த வேனில் நின்றபடி, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:

Vote for a Secular Government at Centre: Stalin

தமிழகத்தில், ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழ்நாட்டு மக்களுக்கு எத்தனையோ திட்டங்களை உருவாக்கி கொடுத்து உள்ளார். கடந்த, 2006ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, முதல்வராக கருணாநிதி செய்த சாதனை போல யாரும் செய்யவில்லை.

வேலூர் உள்பட பத்து நகராட்சிகளை, மாநகராட்சி ஆக்கினார். ஐந்து கோடியில் வேலூர் மாநகராட்சியில், புதியதாக சாலை போடப்பட்டது. ஒகேனக்கல், காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வந்தார். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில், குடிநீர் விற்கும் அவல நிலை தமிழகத்தில் உள்ளது.

குடிநீர் விற்பனை

குடிநீர் கம்பனிகள் தண்ணீர் பாட்டில் விற்பதில் தவறில்லை. ஆனால், ஒரு அரசு, தண்ணீர் விற்க கூடாது. தி.மு.க., ஆட்சியில், குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கி பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கினோம்.

திட்டங்களை முடக்கிய ஜெ.

இந்தியாவில், எங்கும், எந்த அரசும் குடிநீர் விற்பனை செய்வது கிடையாது. உலகத்திலேயே நடக்காத இந்த கொடுமை தமிழகத்தில் நடக்கிறது.கந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடராமல், ஜெயலலிதா முடக்கி விட்டார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

தி.மு.க., ஆட்சியில், வேலூரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்து, 60 சதவீதம் பணி முடிந்தது. ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த, மூன்று ஆண்டு ஆகியும், இந்த திட்டம் முடியவில்லை. கருணாநிதி கொண்டு வந்த திட்டத்தை முடித்தால், அவருக்கு நல்ல பெயர் வந்து விடுமே என்ற காழ்ப்புணர்சி தான், இதற்கு காரணம்.

கொலை கொள்ளைகள்

வேலூர் மாநகராட்சியில், டெங்கு காய்ச்சலில், பத்து குழந்தை இறந்துள்ளது. கொலை, கொள்ளை, பலாத்காரம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. மூன்று ஆண்டுகளில், பத்துக்கும் மேற்பட்ட கொலை நடந்துள்ளது.பா.ஜ.க., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி, பா.ஜ.க., மாநில செயலாளர் வெள்ளையப்பனை, மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் வெட்டிக் கொலை செய்தனர்.

மனிதர்களை விரும்பாத ஜெ

பெண்கள் இரவில் தான் நடந்து செல்ல கஷ்டம். ஜெயலலிதா நாட்டு மக்களை போய் பார்ப்பதில்லை. ஆனால், காட்டில் போய் மிருகங்களை பார்த்து ரசிக்கிறார். அப்போது, அவர் மீது கோபம் கொண்ட ஐந்தறிவு உள்ள யானை, எட்டி உதைத்தது

மீண்டும் எம்.பி ஆக்குங்கள்

ஆறறிவுள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? தொகுதி பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் பேசி, அப்துல் ரகுமான் தீர்த்து வந்தார். இவரை மீண்டும், எம்.பி.,யாக்க வேண்டும், என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+