மாமா எம்.பி.! அம்மா- மகன் எம்எல்ஏ? விருத்தாசலத்தில் முரசு கொட்டுறாரா பிரேமலதா?
விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்துக்கு வெற்றி வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து தந்தி டிவி எடுத்த கருத்து கணிப்புகளில் பார்க்கலாம். விருதுநகரில் விஜய பிரபாகரனுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கணிப்புகள் வெளியான நிலையில் அம்மாவுக்கான வாய்ப்பு எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தந்தி டிவி சார்பில் மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் நேற்று வெளியானது.

இதில் திமுக கூட்டணி 98 இடங்களிலும் அதிமுக கூட்டணி 91 இடங்களிலும் வெல்லுமாம். 47 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும் இந்த 47 தொகுதிகளின் வெற்றியை பொறுத்தே யார் ஆட்சி அமைப்பார்கள் என தெரிய வரும்.
தற்போது விஐபி தொகுதி நிலவரம் என்ற அடிப்படையில் விருத்தாசலம் தொகுதியை பார்க்கலாம். விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்தும், பாமக சார்பில் தமிழரசி, நாதக சார்பில் ஆனந்தி, தவெக சார்பில் விஜய் ஆகியோர் களமிறங்குகிறார்கள். விருத்தாசலத்தில் தேமுதிகவுக்கு 37 சதவீதம் முதல் 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
அது போல் பாமகவுக்கு 33 சதவீதம் முதல் 39 சதவீதம் பேர் வரையும் தவெகவுக்கு 14 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையும், நாதகவுக்கு 2 முதல் 8 சதவீதம் வரையும் வாக்குகள் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் முரசு கொட்ட வாய்ப்பிருப்பதாக தந்தி டிவி கணிப்பில் தெரிவித்துள்ளது.
விஜயகாந்த் முதல் முறையாக வென்ற தொகுதி இது. இங்கு அவரது மனைவி பிரேமலதாவுக்கு அதிகளவில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேல் பிரேமலதா பிரபலமான முகமாகவும் தேமுதிகவின் முகமாகவும் அறியப்படுகிறார். எனவே அவருக்கு மக்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என கணிப்புகள் சொல்கின்றன.
கடந்த கால தேர்தல் முடிவுகள்:
2021 தேர்தல்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இவர் பாமக வேட்பாளர் கார்த்திகேயனை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (சுமார் 862 வாக்குகள்) தோற்கடித்தார். இதே தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
2016 தேர்தல்: அ.தி.மு.க-வின் வி.டி. கலைச்செல்வன் வெற்றி பெற்றார். இவர் தி.மு.க வேட்பாளர் பி. கோவிந்தசாமியை வீழ்த்தினார்.
2011 தேர்தல்: தேமுதிக-வின் வி. முத்துகுமார் வெற்றி பெற்றார். அப்போது அ.தி.மு.க - தேமுதிக கூட்டணி வலுவாக இருந்ததால் இத்தொகுதி தேமுதிக வசம் சென்றது.
2006 தேர்தல்: தேமுதிக நிறுவனர் கே. விஜயகாந்த் வெற்றி பெற்றார். மாநிலம் முழுவதும் தி.மு.க - அ.தி.மு.க அலை வீசியபோதும், தனித்து நின்ற விஜயகாந்த் வெற்றி பெற்ற ஒரே தொகுதி இதுதான்.
2001 தேர்தல்: பா.ம.க-வின் ஆர். கோவிந்தசாமி வெற்றி பெற்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications