ஓட்டுப் போட்டதை உறுதி செய்யும் வி-பேட் இயந்திரங்கள்... நெல்லைக்கு கூடுதலாக 38 வருகை
நெல்லை: நெல்லை தொகுதிக்கு வாக்கு பதிவை உறுதி செய்யும் 38, விவி பேட் இயந்திரங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு மே 16ம் தேதி தேர்தல் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, நாங்குநேரி, ராதாபுரம், ஆம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 10 தொகுதிகளி்லும் வாக்கு பதிவக்காக 2931 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 தொகுதிகளில் மட்டுமே வாக்கு பதிவை உறுதி செய்யும், விவி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக நெல்லை தொகுதிக்கு ஏற்கனவே 386 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஆனால் இது ஒரு சில இயந்திரங்கள் பழுதாகி இருந்தன.
இதனால் நெல்லை தொகுதிக்கு வேறு 38 இயந்திரங்களை அனுப்பி வைக்குமாறு கலெக்டர் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வேறு 38 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் இந்த இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீபுரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவுக்கு முந்தைய நாள் இந்த இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குசாவடிக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications